சூப்பர் ஸ்டாருக்கு நேற்று தான் ஸ்டார் பிறந்த நாளாம்': எப்படி கொண்டாடினர் தெரியுமா?

ரஜினிகாந்த் நேற்று தனது நட்சத்திர பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.


வரும் டிசம்பர் 12ம் தேதி(வியாழக்கிழமை) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை வெகு விமர்சியாக கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் நாட்களை எண்ணி வருகின்றனர்


ஆனால் திடீரென்று நேற்றே ரஜினி அவரது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடி உள்ளார். எதற்காக ரஜினி பத்து நாட்களுக்கு முன்பே கொண்டாடினர் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். பிறகு தான் தெரிந்தது நேற்று ரஜினிகாந்தின் நட்சத்திர பிறந்தநாளாம்.


அதையொட்டி அவர் தனது வீட்டில் புரோகிதர்களை வரவைத்து மந்திரங்கள் முழங்க சிறப்பாக ஹோமம் நடத்தி தனது நட்சத்திர பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார்.


இதையடுத்து ரஜினி காலில் விழுந்து அவரது மனைவி லதா ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அப்போது அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.