மாருதி பலேனோவுக்கு செக் வைத்த டாடா மோட்டார்ஸ்- அல்ட்ராஸ் கார் ரிவ்யூ..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய அல்ட்ராஸ் கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அந்த காரின் ஃபர்ஸ்ட் ட்ரைவ் ரிவ்யூ குறித்து விரிவாக பார்க்கலாம்.


கடந்த 2019ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45எக்ஸ் என்ற பெயரில் கான்செப்ட் காரை காட்சிக்கு கொண்டு வந்தது. அதை தொடர்ந்து இந்தாண்டு நடந்த ஜெனீவா மோட்டார் கண்காட்சியில், அதே கான்செப்ட் காரை தயாரிப்பு உகந்த மாடலாக, அல்ட்ராஸ் என்ற பெயரில் பொது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்தியாவிலும், விரைவிலேயே இந்த கார் விற்பனைக்கு வரும் என டாடா மோட்டார்ஸ் கூறியது. தற்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் மலரவுள்ள 2020 புத்தாண்டின் முதல் வரவாக அல்ட்ராஸ் கார் இந்திய சந்தையில் கால்பதிக்கவுள்ளது.